ஹூஸ்டன் பல்கலை “தமிழ் ஆய்வு இருக்கை” – மாண்புமிகு துணை முதல்வர் சொந்த பங்களிப்பாக 10,000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி

ஹூஸ்டன் பல்கலை “தமிழ் ஆய்வு இருக்கை” – மாண்புமிகு துணை முதல்வர் சொந்த பங்களிப்பாக 10,000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான “Electronics Donor Board”- ஐ மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் ஆய்வு இருக்கைக்கு தனது சொந்த பங்களிப்பாக 10,000 அமெரிக்க டாலர்கள் வழங்குவதோடு, மேலும் தமிழக அரசின் உதவி கிடைக்கவும் ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

நெப்பர்வல்லி நகரின் “சாவி” – தமிழகத்திலிருந்து முதன்முதலில் நினைவுப்பரிசாக பெற்றார் மாண்புமிகு துணை முதல்வர்

நெப்பர்வல்லி நகரின் “சாவி” – தமிழகத்திலிருந்து முதன்முதலில் நினைவுப்பரிசாக பெற்றார் மாண்புமிகு துணை முதல்வர்

அமெரிக்க நாட்டின் சிகாகோ மாநகரில் Indian American Business Coalition & American Tamil Entrepreneurs சார்பில் நடைபெற்ற “சர்வதேச வட்ட மேசை கருத்தரங்கத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்ககள் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் துவங்க உகந்த சூழ்நிலைகள் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நெப்பர்வல்லி நகரின் மேயர் ஸ்டீவ் சிரிக்கோ நகரின் “சாவி” ஒன்றை மாண்புமிகு துணை முதலமைச்சருக்கு நினைவுப்பரிசாக வழங்கினார். தமிழ்நாட்டிலிருந்து இந்த நினைவுப்பரிசை முதன் முதலில் பெறும் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் தனது நன்றியை தெரிவித்து, நெப்பர்வல்லி மேயர் அவர்களுக்கு ‘‘திருவள்ளுவர் சிலை” ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கு “மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்”

மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கு “மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்”

அமெரிக்க நாட்டின் நெபர்வல்லியில் உள்ள மூத்த குடிமகன்களுக்கான மெட்ரோபாலிட்டன் ஏசியா பேமிலி சர்வீசஸ் மையத்தின் சார்பில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அவருக்கு ‘மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்’ என்ற பதக்கம் வழங்கப்பட்டது.

10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு பாராட்டு விழாவில் மாண்புமிகு துணை முதல்வர்

10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு பாராட்டு விழாவில் மாண்புமிகு துணை முதல்வர்

சிகாகோ தமிழ்சங்கம் சார்பில் நடைபெற்ற “10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு பாராட்டு விழாவில்”, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

“தங்கத் தமிழ் மகன்” விருது பெற்றார்  மாண்புமிகு துணை முதல்வர்

“தங்கத் தமிழ் மகன்” விருது பெற்றார் மாண்புமிகு துணை முதல்வர்

அமெரிக்க நாட்டின் சிகாகோ மாநகரில், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் “தங்கத் தமிழ் மகன் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம்

அமெரிக்காவில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம்

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அந்நாட்டின் சிகாகோ மாநகரில் அமெரிக்காவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.