அரசு பதிவுத்துறையில் STAR 2.0 மென்பொருள் விரிவாக்க திட்டம் துவக்கம்

அரசு பதிவுத்துறையில் STAR 2.0 மென்பொருள் விரிவாக்க திட்டம் துவக்கம்

மாண்புமிகு முதல்வர் அவர்கள் வணிகவரி & பதிவுத் துறை சார்பில் திருக்கோவிலூர், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, பதிவுத்துறையில் STAR 2.0 மென்பொருள் விரிவாக்க திட்டம் & 9 வணிகவரித்துறை அலுவலகங்களில் CCTV கேமராக்களின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்.

புதிய அருங்காட்சியகங்கள் திறப்பு

புதிய அருங்காட்சியகங்கள் திறப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரியலூர்-வாரணவாசியில் கட்டப்பட்டுள்ள புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம், புதிதாக கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகம்,கலை பண்பாட்டுத் துறை கட்டிடங்களை திறந்து வைத்து, புதுக்கோட்டையில் கட்டப்படவுள்ள இசைப்பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் இன்று இரண்டாம் நாளாக தலைமை செயலகத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் – கூரம்பாக்கம் ஏரிகளில் குடிமராமத்து பணிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் – கூரம்பாக்கம் ஏரிகளில் குடிமராமத்து பணிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் தொடக்க விழாவில் திருவள்ளூர், கூரம்பாக்கம் கிராம ஏரிகளில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.

திருவள்ளூர்- பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர்- பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, குடிமராமத்து பணிகள் 2019-20ன் கீழ், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் தொடக்க விழாவில், திருவள்ளூர், 43 பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.

தேசிய கைத்தறி தினம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வாழ்த்து

தேசிய கைத்தறி தினம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வாழ்த்து

தேசிய கைத்தறி தினத்தையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

கைத்தறித் தொழில் விவசாயத்துக்கு அடுத்து மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் தொழிலாக விளங்குகிறது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் மக்கள் கைத்தறி பட்டு மற்றும் பருத்தி ரகங்களை வாங்கி பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவு

குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவு

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தேனியில் அரசு சட்டக்கல்லூரி அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் ஆய்வு

தேனியில் அரசு சட்டக்கல்லூரி அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் ஆய்வு

தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, தப்புக்குண்டு அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே சட்டக்கல்லூரி கட்டடங்கள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிறுபான்மையின மகளிர்க்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் நிதியுதவி

சிறுபான்மையின மகளிர்க்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் நிதியுதவி

தேனி மாவட்டத்தில் இன்று (5.8.2019) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை & முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் இணைந்து நடத்திய முஸ்லீம் மகளிர்க்கு நிதியுதவி வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காமன்வெல்த்தில் பங்கேற்க நிதியுதவி

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காமன்வெல்த்தில் பங்கேற்க நிதியுதவி

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அடுத்தமாதம் லண்டனில் நடைபெறவுள்ள கண்பார்வையற்றோருக்கான காமன்வெல்த் ஜூடோ போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்கவுள்ள எடப்பாடியை சேர்ந்த பி.சுபாஷினி என்ற மாணவிக்கு உதவிடும் வகையில் ரூ.1.35 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.