மாண்புமிகு முதல்வரிடம் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் வாழ்த்து

மாண்புமிகு முதல்வரிடம் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் வாழ்த்து

மாண்புமிகு முதல்வர் அவர்களை சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் சந்தித்து ஹரியானாவில் 38வது அகில இந்திய குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் பங்கேற்று வென்ற சுழல்கோப்பை, தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாண்புமிகு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாண்புமிகு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில், முகாம் அலுவலகத்தில் மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக காவல் துறைக்கு மத்திய அரசு விருது

தமிழக காவல் துறைக்கு மத்திய அரசு விருது

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக தமிழகத்திற்கு வழங்கப்பட்ட “ஸ்காட்ச் தங்க விருதினையும், மூன்றாவது கண் எனப்படும் CCTV கேமராக்கள் நிறுவும் பணியை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல்துறைக்கு வழங்கப்பட்ட “ஸ்காட்ச் வெள்ளி விருதை” மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.