கால்நடை ஆராய்ச்சி பூங்கா, மருத்துவக் கல்லூரி அமைப்பு – மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் மாண்புமிகு அமைச்சர்

கால்நடை ஆராய்ச்சி பூங்கா, மருத்துவக் கல்லூரி அமைப்பு – மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் மாண்புமிகு அமைச்சர்

சேலம் – தலைவாசலில் சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மாண்புமிகு முதல்வர் அவர்களை மாண்புமிகு அமைச்சர் திரு.உடுமலை இராதாகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

காவேரி டெல்டா பகுதிகள் ” பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” மாண்புமிகு முதல்வர் சிறப்புரை

காவேரி டெல்டா பகுதிகள் ” பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” மாண்புமிகு முதல்வர் சிறப்புரை

சேலத்தில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப்பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டு விழாவில் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” மாற்றப்படும் எனவும், காவிரி டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” செயல்படுத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து இதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றிட மாண்புமிகு அம்மாவின் அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்க இவ்வரசு எப்போதும் அனுமதி அளிக்காது எனவும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா!!

கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா!!

சேலத்தில் 900 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1000 கோடி மதிப்பில் அமையவுள்ள “சேலம் – ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி” ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அடிக்கல் நாட்டினார். மேலும் இவ்விழாவில் “தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை” நூல் மற்றும் “கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தின் இலச்சினையை” மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளியிட மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பெற்றுக் கொண்டார். அத்துடன் கால்நடை வளர்ப்பு முறை, நாட்டினங்களை பாதுகாத்தல், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள், விவசாயத்தில் உள்ள புதிய ரகங்கள், அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய பயன்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த (224 அரங்குகள்) கண்காட்சியினையும் பார்வையிட்டார்.