மேட்டுப்பாளையம் மழை விபத்து – மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம் மழை விபத்து – மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் நேரில் ஆய்வு

இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – நடூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாண்புமிகு முதல்வர் அவர்கள்,

கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையத்தில் கனமழையால் மதில்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதில்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நடூர் பகுதியில் ஓட்டு வீடுகளில் வசிக்கின்ற மக்களுக்கு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படுமென தெரிவித்தார்.

தொடர்ந்து, பவானி ஆற்றங்கரையில் வசித்து வந்த சுமார் 300 பேருக்கு வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேட்டுப்பாளையம் துயரச் சம்பவத்தில், மதில் சுவரின் உரிமையாளர் மீது உரிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.