மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாநில பெண் குழந்தைகள் தினம் – போஷன் அபியான் திட்டம்

மாநில பெண் குழந்தைகள் தினம் – போஷன் அபியான் திட்டம்

மாநில பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, போஷன் அபியான் திட்டம், கண்தானம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட கடலூர்- மாலுமியர்பேட்டையை சார்ந்த சிறுமி ச.பவதாரணிக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாநில அரசின் விருது மற்றும் ரூ.1 லட்சம் காசோலையை வழங்கி பாராட்டினார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழா – முதிர்வுத் தொகை காசோலை

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழா – முதிர்வுத் தொகை காசோலை

மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாளான “மாநில பெண் குழந்தைகள் தினத்தையொட்டி” முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு முதிர்வுத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

மாநில பெண் குழந்தைகள் தினம் – வைப்பீட்டு தொகை

மாநில பெண் குழந்தைகள் தினம் – வைப்பீட்டு தொகை

மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளை “மாநில பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடுவதையொட்டி” முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக இணைந்த 14 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வைப்பீட்டுத் தொகைக்கான பத்திரங்களை மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்!!

தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்!!

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி “தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள்” எனும், மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை இன்று தலைமை செயலகம் எதிரில் மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.

மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா – நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா – நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாளையொட்டி, கழக பணியாற்றும் போது பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், நலிந்த தொழிலாளர்கள் 109 பேருக்கு தலா ரூ.1 லட்சம் என மொத்தம் 123 நபர்களுக்கு ரூ.1.37 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டன.

மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா –  மருத்துவ முகாம்!

மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா – மருத்துவ முகாம்!

மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி 26.2.2020 வரை நடைபெறும் மருத்துவமுகாமில் இருதய சிறப்பு பரிசோதனை, கண், இரத்த பரிசோதனைகள், எலும்பு முறிவு, மூட்டுவலி உள்ளிட்ட அனைத்துவித பரிசோதனைகளும் செய்யப்பட்டு, ஆலோசனைகளும் மருந்துகளும் வழங்கப்படவுள்ளது.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாள் விழா!!

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாள் விழா!!

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தலைமைக் கழகத்தில் மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், கழக உடன்பிறப்புகள் முன்னிலையில் கேக் வெட்டி விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா – சிறப்பு அன்னதானம்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா – சிறப்பு அன்னதானம்

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி இன்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, ஏழை, எளிய மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியீடு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியீடு

இன்று @Dr_NamadhuAmma நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா சிறப்பு மலரை” கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.