ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முதல்வர், துணை முதல்வரிடம் வாழ்த்து

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முதல்வர், துணை முதல்வரிடம் வாழ்த்து

அரியலூர் மாவட்ட கழக துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.J.K.N. இராமஜெயலிங்கம் அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேல்மருவத்தூர் அருள்மிகு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக சுபமுகூர்த்த முத்து விழா – மாண்புமிகு துணை முதல்வர் அழைப்பு

மேல்மருவத்தூர் அருள்மிகு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக சுபமுகூர்த்த முத்து விழா – மாண்புமிகு துணை முதல்வர் அழைப்பு

மேல்மருவத்தூர் அருள்மிகு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக சுபமுகூர்த்த முத்து விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு, பங்காரு அடிகளாரது மகனும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவருமான திரு.செந்தில்குமார் அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து அழைப்பிதழ் வழங்கினார்.

திருச்செந்தூர் ஒன்றியக் குழு தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து

திருச்செந்தூர் ஒன்றியக் குழு தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.செல்வி வடமலைப் பாண்டியன் அவர்கள் குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

மாண்புமிகு துணை முதல்வரிடம் கழக மாவட்ட அணி செயலாளர்கள் வாழ்த்து

மாண்புமிகு துணை முதல்வரிடம் கழக மாவட்ட அணி செயலாளர்கள் வாழ்த்து

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக மாணவர் அணி துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் திரு.C.மணிமாறன் அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அணி செயலாளர் திரு.G.M.சாந்தகுமார் உள்ளிட்ட மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

பல்வேறு கட்சியினர் மாண்புமிகு முதல்வர் முன்னிலையில் கழகத்தில் இணைப்பு

பல்வேறு கட்சியினர் மாண்புமிகு முதல்வர் முன்னிலையில் கழகத்தில் இணைப்பு

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, பாளையங்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அமமுக கழகச் செயலாளரும் தலைமை கழக பேச்சாளருமான டாக்டர் எஸ்.குருநாதன் அவர்கள் மற்றும் சேலம் கொண்டலாம்பட்டி, M.N.பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சிகளிலிருந்தும் விலகியவர்கள் நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்தனர்.

45 திமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைப்பு

45 திமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைப்பு

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை திமுக SC/ST அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 45 பேர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் முதன்மை செயலாளர் இல்ல திருமண விழா!!

கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் முதன்மை செயலாளர் இல்ல திருமண விழா!!

சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் முதன்மை செயலாளர் திரு.நித்யாநந்தம் அவர்களின் இல்லத் திருமண விழாவில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மாண்புமிகு துணை முதல்வருடன் மாண்புமிகு அமைச்சர் சந்திப்பு

மாண்புமிகு துணை முதல்வருடன் மாண்புமிகு அமைச்சர் சந்திப்பு

அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, கரூர் மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சருமான திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்கள் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு முதல்வர் அவர்களை கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு

மாண்புமிகு முதல்வர் அவர்களை கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.பிரபு அவர்கள் சந்தித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைத்திட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து!!

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து!!

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை கடலூர் மத்திய மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பதவிக்கு கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி.கலையரசி கோவிந்தராஜ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.