பன்னாட்டு அரிமா சங்கத்தின் இலவச திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் அழைப்பு

பன்னாட்டு அரிமா சங்கத்தின் இலவச திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் அழைப்பு

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் அரிமா சங்க முன்னாள் ஆளுநரும், விழா குழுத் தலைவருமான திரு.லயன் N.R.தனபாலன் அவர்கள் சந்தித்து, இராயப்பேட்டை YMCA திடலில் (12.02.2020) அன்று பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் நடைபெறவுள்ள ஏழை எளியோருக்கான இலவச திருமண விழா அழைப்பிதழை வழங்கினார்.

கழக துணை ஒருங்கிணைப்பாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் அழைப்பு

கழக துணை ஒருங்கிணைப்பாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் அழைப்பு

கழக துணை ஒருங்கிணைப்பாளரும் கழக அமைப்புச் செயலாளரும் தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.R.வைத்திலிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துமாறு அன்போடு கேட்டுக் கொண்டு அழைப்பிதழ் வழங்கினார்.

தலைமைக் கழக ஆலோசனை கூட்டம்

தலைமைக் கழக ஆலோசனை கூட்டம்

தலைமை செயலகத்தில் இன்று (11.02.2020) நடைபெற்ற திருவண்ணாமலை (வடக்கு) (தெற்கு), நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி (வடக்கு) (தெற்கு) மாவட்டங்களுக்குட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

கழக துணை ஒருங்கிணைப்பாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு முதல்வர் அழைப்பு

கழக துணை ஒருங்கிணைப்பாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு முதல்வர் அழைப்பு

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் சந்தித்து தனது மகன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டு அழைப்பிதழ் வழங்கினார்.

தலைமை கழக அறிவிப்பு

தலைமை கழக அறிவிப்பு

கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து தலைமை கழகத்தில் 10.2.2020 முதல் 13.2.2020 வரை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருவொற்றியூர் பகுதிக் கழகச் செயலாளர் இல்ல புதுமனை புகுவிழா – மாண்புமிகு துணை முதல்வர் பங்கேற்ப்பு

திருவொற்றியூர் பகுதிக் கழகச் செயலாளர் இல்ல புதுமனை புகுவிழா – மாண்புமிகு துணை முதல்வர் பங்கேற்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பகுதிக் கழகச் செயலாளர் திரு.கே.கிருஷ்ணன் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா – மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா – மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

சென்னை, திருவேற்காட்டில் இன்று (05.02.2020) நடைபெற்ற முன்னாள் அமைச்சர் திருமதி.எஸ்.கோகுல இந்திரா அவர்களின் மகள் A.R.C. நிவேதா- R.ராகுல் கார்த்திகேயா அவர்களின் திருமண விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மாண்புமிகு முதல்வர் அவர்களை மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா தலைவர் சந்தித்தார்

மாண்புமிகு முதல்வர் அவர்களை மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா தலைவர் சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு.தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்கள் சந்தித்து, அரியலூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்ட திமுக, அமமுகவினர் மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

இராமநாதபுரம் மாவட்ட திமுக, அமமுகவினர் மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவிலிருந்து விலகிய மண்டபம் ஒன்றிய செயலாளர் திரு.முத்துச்செல்வம் அவர்கள் தலைமையில் 200 பேர், அமமுகவிலிருந்து விலகிய கீழக்கரை நகர செயலாளர் திரு.சுரேஷ் அவர்கள் தலைமையில் 200 பேர், உள்ளாட்சி தேர்தலில் வென்ற (சுயேட்சை) முதுகுளத்தூர் 13,15வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் போகலூர் 1வது வார்டு உறுப்பினர்கள் 100 பேர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் என மொத்தம் 500 பேர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

குற்றாலம் பேரூராட்சிக் கழக செயலாளர் மாண்புமிகு துணை முதல்வரிடம் வாழ்த்து

குற்றாலம் பேரூராட்சிக் கழக செயலாளர் மாண்புமிகு துணை முதல்வரிடம் வாழ்த்து

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.M.கணேஷ் தாமோதரன் அவர்கள் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.