தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

கழக வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் பணிகளை சிறப்பாக செய்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

 

 

 

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா!!

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா!!

24.02.2020 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெறும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவில் கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து, தலைமைக் கழகத்தில் 16.2.2020 அன்று சேலம் (மாநகர், புறநகர்), நாமக்கல், கிருஷ்ணகிரி (கிழக்கு, மேற்கு), ஈரோடு (மாநகர், புறநகர்), தேனி, கோவை (மாநகர், புறநகர்), அரியலூர், தருமபுரி, திருப்பூர் (மாநகர், புறநகர்) ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

 

திருமதி.எம்.ஷீலா பிரியா அவர்களது தங்கை  இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

திருமதி.எம்.ஷீலா பிரியா அவர்களது தங்கை இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், மேயர் இராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெற்ற திருமதி.எம்.ஷீலா பிரியா இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களது தங்கையின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கழக வளர்ச்சி,  தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

கழக வளர்ச்சி, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தலைமைக் கழகத்தில் இன்று (15.02.2020) நடைபெற்ற நெல்லை (மாநகர், புறநகர்), காஞ்சி (கிழக்கு, மத்திய, மேற்கு), வேலூர் (கிழக்கு, மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை MLA – விடம் நலம் விசாரித்தார் மாண்புமிகு முதல்வர்

உளுந்தூர்பேட்டை MLA – விடம் நலம் விசாரித்தார் மாண்புமிகு முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (12.02.2020) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.குமரகுரு அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் கழகத்தில் உறுப்பினராக இணைந்தார்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் கழகத்தில் உறுப்பினராக இணைந்தார்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் திரு.என்.ராமர் அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

ஏழை எளியோருக்கான இலவச திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் பங்கேற்ப்பு!!

ஏழை எளியோருக்கான இலவச திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் பங்கேற்ப்பு!!

இன்று பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் ராயப்பேட்டை YMCA திடலில் நடைபெறும் “ஏழை எளியோருக்கான இலவச திருமண விழாவில்” மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர் தலைமையில் கழகத்தில் இணைந்தார்

விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர் தலைமையில் கழகத்தில் இணைந்தார்

அமமுகவில் இருந்து விலகிய விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.S.G.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் திரு.S.G.S.விக்னேஷ் ஆகியோர் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து கழகத்தில் இணைந்தனர்.

தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் 12.02.2020 அன்று நடைபெறுவதாக இருந்த மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு 16.02.2020 அன்று நடைபெறும் எனவும், ஏற்கனவே அறிவித்தப்படி அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.