டிடிவி கும்பலுக்கு மரண அடி கொடுங்கள் – சூலூர் பிரச்சாரத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறைகூவல்

டிடிவி கும்பலுக்கு மரண அடி கொடுங்கள் – சூலூர் பிரச்சாரத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறைகூவல்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் கழக வேட்பாளார் திரு.வி.பி.கந்தசாமி அவர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கிய கழக ஆட்சிக்கு தீய சக்தியோடு சேர்ந்து துரோகம் இழைத்த டி.டி.வி.தினகரன் கும்பலுக்கு இந்த தேர்தலில் மரண அடி கொடுங்கள் என்று பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

சூலூர் தொகுதி சின்னியம்பாளையத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சூலூர் தொகுதி சின்னியம்பாளையத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திரு.வி.பி கந்தசாமி அவர்களை ஆதரித்து கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

தமிழின துரோகி திமுக காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் அறைகூவல்

தமிழின துரோகி திமுக காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் அறைகூவல்

தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யாமல் துரோகம் செய்வதையே தொழிலாகக் கொண்ட திமுக – காங்கிரஸ் கூட்டணியை இத்தேர்தலோடு விரட்டியடிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திர்.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று கழக வேட்பாளர் திர்.எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வளையன்குளம், சிந்தாமணி, வில்லாபுரம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையே கழக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

முன்னதாக கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.கே.பி.முனுசாமி, திரு.வைத்திலிங்கம் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன், திரூ.செல்லூர் கே.ராஜூ, திரு.ஆர்.பி.உதயகுமார், திரூ.எம்.சி.சம்பத் மற்றும் திர்.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை வரவேற்றனர்.

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பரப்புரை

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பரப்புரை

கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்களும் உடனிருந்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி வளையங்குளம் பகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருப்பரங்குன்றம் தொகுதி வளையங்குளம் பகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மதுரை மாவட்டம், வளையங்குளம் பகுதியில்
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திரு.எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு தொழில் துறை அமைச்சருமான திரு.எம்.சி.சம்பத் அவர்கள் உடனிருந்தார்.

காவேரி கோதாவரி இணைப்பு உறுதி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் திட்டவட்டம்

காவேரி கோதாவரி இணைப்பு உறுதி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் திட்டவட்டம்

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு கழக வேட்பாளர் திரு.வி.வி.செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். பிரச்சார கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் காவேரி- கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் மூலம் நிரந்தர குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

அரவக்குறிச்சி தொகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

அரவக்குறிச்சி தொகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.வி.வி.செந்திநாதன் அவர்களை ஆதரித்து புகளூர் நான்கு சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இல்லை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

சூலூர் தொகுதி செஞ்சேரி பிரிவு பகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சூலூர் தொகுதி செஞ்சேரி பிரிவு பகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சூலூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.வி.பி.கந்தசாமி அவர்களை ஆதரித்து கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட செஞ்சேரி பிரிவு பகுதியில் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

சூலூர் தொகுதி ஜெ.கிருஷ்ணாபுரத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சூலூர் தொகுதி ஜெ.கிருஷ்ணாபுரத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சூலூர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.வி.பி.கந்தசாமி அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.பெ.மோகன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இல்லை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.கடம்பூர் ராஜூ மற்றும் டாக்டர் எம்.மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.