உலகத் தாய்மொழி நாள் வாழ்த்து!

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்து!

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியைப் போற்றிப் பாதுகாத்திடும் வகையில் உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாளன்று, தமிழ் மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்திடும் விதமாக மாநில அளவில் கவியரங்கம், கருத்தரங்கம் போன்றவை நடத்தப்பட்டு, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசால் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது, என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

AEPC தலைவர் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து

AEPC தலைவர் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை Apparel Export Promotion Council-ன் தலைவராக 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள AEPC தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

“பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்” மாண்புமிகு முதல்வருக்கு நன்றி

“பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்” மாண்புமிகு முதல்வருக்கு நன்றி

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என அறிவித்தமைக்காக மாண்புமிகு முதல்வர் அவர்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மற்றும் கதிராமங்கலம் விவசாய பெருமக்கள் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மாண்புமிகு துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள்

மாண்புமிகு துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள்

மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அரியலூர் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக துணைச் செயலாளர், நகர கழக செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பேரவை முன்னாள் செயலாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பேரவை முன்னாள் செயலாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

சென்னை, கெல்லீஸ் பால்பர் சாலை லைட்டி ஹால் திருமண அரங்கத்தில் நடைபெற்ற எழும்பூர் பகுதி புரட்சித்தலைவி அம்மா பேரவையின் முன்னாள் செயலாளர் திரு.A.அற்புதராஜ் அவர்களது இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

“முத்திரை பதித்த 3ஆண்டு சாதனைகள், மதுரை போற்றும் நூறாண்டு சரித்திரங்கள்” – மாண்புமிகு அமைச்சர்கள் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து

“முத்திரை பதித்த 3ஆண்டு சாதனைகள், மதுரை போற்றும் நூறாண்டு சரித்திரங்கள்” – மாண்புமிகு அமைச்சர்கள் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து

“முத்திரை பதித்த 3ஆண்டு சாதனைகள், மதுரை போற்றும் நூறாண்டு சரித்திரங்கள்” என மதுரை மாவட்டத்தின் நலத்திட்டங்கள், அறிவிப்புகள், பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்திய வளர்ச்சி பணிகளின் சாதனை மலர்களை மாண்புமிகு அமைச்சர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

மாண்புமிகு தெலுங்கானா முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மாண்புமிகு முதல்வர்

மாண்புமிகு தெலுங்கானா முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மாண்புமிகு முதல்வர்

இன்று (17.02.2020) மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர ராவ் அவர்கள் பிறந்தநாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

4 – ஆம் ஆண்டு சாதனை பயணம் – மாண்புமிகு முதல்வருக்கு மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

4 – ஆம் ஆண்டு சாதனை பயணம் – மாண்புமிகு முதல்வருக்கு மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசு நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசின் 3 ஆண்டு நிறைவு விழா மாண்புமிகு முதல்வருக்கு வாழ்த்து

தமிழக அரசின் 3 ஆண்டு நிறைவு விழா மாண்புமிகு முதல்வருக்கு வாழ்த்து

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு 4 -ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தலைமை செயலாளர்கள் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திருமதி.எம்.ஷீலா பிரியா அவர்களது தங்கை  இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

திருமதி.எம்.ஷீலா பிரியா அவர்களது தங்கை இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், மேயர் இராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெற்ற திருமதி.எம்.ஷீலா பிரியா இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களது தங்கையின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.