பாமக நிறுவனர் அவர்களுக்கு மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து

பாமக நிறுவனர் அவர்களுக்கு மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாண்புமிகு முதலவர் அவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காக உழைக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு காலம் நீடுழி வாழ இறைவனை வேண்டி, இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

மாண்புமிகு துணை முதலவர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய
@drramadoss ஐயா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் பொதுவாழ்வில் சேவைகளைத் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2 – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து

விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2 – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய முழுக்க முழுக்க இந்தியாவிலே தயாரான சந்திராயன் 2 விண்கலத்தினை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தமைக்கு மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில்
“உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திராயன் – 2 விண்கலனை ஏவி சரித்திரம் படைத்துள்ளது இந்தியா. இந்தியராக ஒவ்வொருவரையும் பெருமையடைச் செய்யும் சரித்திர சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ குழுவினருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!” என பதிவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கும் திரு.ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கும் திரு.ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “ஆந்திர மக்களுக்கு சேவை செய்வதில் உங்கள் தந்தையின் வழிநடத்துதலை நீங்கள் பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ஒடிஷா முதல்வராக பதவியேற்கும் நவீன் பட்நாயக் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து

ஒடிஷா முதல்வராக பதவியேற்கும் நவீன் பட்நாயக் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து

ஓடிசா மாநிலத்தின் முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றுள்ள திரு.நவீன் பட்நாயக் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் “உங்களது ஆற்றல்மிகு தலைமையின் கீழ் ஒடிசாவின் வளர்ச்சி வலிமையடையவும், தமிழகத்துடனான உறவில் புதிய உச்சத்தையும் தொடும் எனவும் நம்புகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து

தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை” என்ற நம் ஆன்றோர் வாக்கிற்கிணங்க உழைப்பின் மேன்மையை உணர்த்தும் உன்னத திருநாளாகவும் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாகவும் திகழ்கின்ற இப்பொன்னாளில் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகள்!

இவ்வுலகம் உழைப்பவர்களாலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. தங்களின் கடின உழைப்பால் வீட்டையும் நாட்டையும் உயர்த்திட அயராது பாடுபட்டு கொண்டிருக்கும் உழைப்பாளர் பெருமக்கள் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று மகிழ்வோடு வாழ்ந்திட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.