கோடீஸ்வரி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் 21.01.2020 அன்று நடத்தப்பட்ட கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று ரூ.1 கோடி வென்ற மதுரையைச் சேர்ந்த மாற்றித்திறனாளி திருமதி.கெளசல்யா அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு முதல்வருடன் மாண்புமிகு அமைச்சர் சந்திப்பு

மாண்புமிகு முதல்வருடன் மாண்புமிகு அமைச்சர் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (20.01.2020) முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர் @DrVSarojaoffl அவர்கள் தனது திருமண நாளையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு முதல்வரிடம் கழக உறுப்பினர்கள் வாழ்த்து!

மாண்புமிகு முதல்வரிடம் கழக உறுப்பினர்கள் வாழ்த்து!

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மேற்கு மாவட்டத்தில் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நல்லூர், மங்களூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

மாண்புமிகு துணை முதல்வரின் பொங்கல் விழா!

மாண்புமிகு துணை முதல்வரின் பொங்கல் விழா!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் குடும்பத்தினருடன் அவரது இல்லத்தில் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினார்.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் Dr.MGR 103- வது பிறந்தநாள்- மாண்புமிகு முதல்வர் மரியாதை

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் Dr.MGR 103- வது பிறந்தநாள்- மாண்புமிகு முதல்வர் மரியாதை

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக அரசு சார்பில், பாரத ரத்னா புரட்சித்தலைவர் Dr.MGR அவர்களின் 103-வது பிறந்தநாளையொட்டி சென்னை- கிண்டி தமிழ்நாடு Dr.MGR மருத்துவ பல்கலை வளாகத்திலுள்ள அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொங்கல் கொண்டாட்டம்!

மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொங்கல் கொண்டாட்டம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு பசு மற்றும் காளைகளுக்கு உணவுகள் வழங்கியும், உரியடித்தும், பொங்கல் வழங்கியும் விழாவினை சிறப்பித்ததோட மட்டுமல்லாமல் எடப்பாடியில் டென்னிஸ் க்ளப்பின் ஆண்டு விளையாட்டு போட்டிகளையும் துவக்கி வைத்தார்.

கழக ஒருங்கிணைப்பாளர்களின் பொங்கல் வாழ்த்து!

கழக ஒருங்கிணைப்பாளர்களின் பொங்கல் வாழ்த்து!

“தமிழர் திருநாள்” என போற்றப்படும் தனிச்சிறப்பு மிக்க பொங்கல் பெருவிழாவை உலகமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தமிழர்கள் அனைவருக்கும் கழகம் சார்பில் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!

தினத்தந்தி குழுமத்தின் பொங்கல் வாழ்த்து!

தினத்தந்தி குழுமத்தின் பொங்கல் வாழ்த்து!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தினத்தந்தி குழுமத்தின் தலைவர் திரு.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் சந்தித்து பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்

பிறந்தநாளையொட்டி மாண்புமிகு முதல்வரிடம் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வாழ்த்து பெற்றார்

பிறந்தநாளையொட்டி மாண்புமிகு முதல்வரிடம் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வாழ்த்து பெற்றார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு பேரவை துணைத் தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்து

மாண்புமிகு பேரவை துணைத் தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்து

சிறந்த நல்லாட்சிக்கான குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதை முன்னிட்டும், ஆங்கில புத்தாண்டையொட்டியும், மாண்புமிகு தமிழக சட்டமன்றப் பேரவை துணைத்தலைவர் திரு.பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவர்கள் மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.