மாண்புமிகு முதல்வரிடம் M-Auto  நிறுவன தலைவர் வாழ்த்து

மாண்புமிகு முதல்வரிடம் M-Auto நிறுவன தலைவர் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை M-Auto Electricity Mobility Pvt. Ltd., நிறுவனத்தின் தலைவர் திரு.மன்சூர் அலிகான் அவர்கள் சந்தித்து பெண்களால் இயக்கப்படும் மின்சார ஆட்டோ மற்றும் நடமாடும் தேநீர் விற்பனையகம் ஆகியவை குறித்து விளக்கி வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு முதல்வரிடம் காவல்துறை இயக்குநர்கள் வாழ்த்து

மாண்புமிகு முதல்வரிடம் காவல்துறை இயக்குநர்கள் வாழ்த்து

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இன்று காவல்துறை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள திரு.சுனில்குமார், திரு.சுனில்குமார் சிங் ஆகியோரும் காவல்துறை கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள திரு.ச.நா.சேஷசாய், திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு ரூ.1.13 கோடியில் வால்வோ சொகுசுப் பேருந்துகள்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு ரூ.1.13 கோடியில் வால்வோ சொகுசுப் பேருந்துகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி மூலம் வாங்கப்பட்ட ரூ.1.13 கோடி மதிப்பிலான வால்வோ சொகுசுப் பேருந்துகள் சேவையை துவக்கி வைத்தார்.

முன்னாள் எம்.பி திரு.ஆர்.கே.பாரதிமோகன் அவர்களை நேரில் சந்தித்து  மாண்புமிகு முதல்வர் அவர்கள் நலம் விசாரிப்பு

முன்னாள் எம்.பி திரு.ஆர்.கே.பாரதிமோகன் அவர்களை நேரில் சந்தித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் நலம் விசாரிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (20.11.2019) சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கே.பாரதிமோகன் அவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் விசிக தலைவர் அவர்கள் சந்திப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் விசிக தலைவர் அவர்கள் சந்திப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று, விசிக தலைவர் திரு.தொல்.திருமாவளவன் MP அவர்கள் சந்தித்து, பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை எளிமைப்படுத்துவது குறித்தும், தனது தொகுதி கோரிக்கைகள் குறித்தும் சந்தித்து மனு அளித்தார்.

மாண்புமிகு முன்னாள் மத்திய நிதியமைச்சர் மறைவு – மாண்புமிகு முதல்வர் துணை முதல்வர் அவர்கள் இரங்கல்

மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழக பாஜகவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான
திரு.அருண்ஜெட்லி அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த திரு.அருண்ஜெட்லி அவர்கள் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும் சேவையினை நல்கியுள்ளவர்.

திரு.அருண்ஜெட்லி அவர்கள் மறைவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்.

ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 2019 – பாதுகாப்பு வசதிகள் குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 2019 – பாதுகாப்பு வசதிகள் குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவதையொட்டி அங்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அத்திவரதர் வைபவம் -2019 ஐ முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாவது ;

காஞ்சிபுரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்துவும், அப்பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுத்து செல்லவும் வசதிகள் ஏற்படுத்தித்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்களும், மாற்றுத் திறனாளிகளும் அமர்ந்து செல்ல கூடுதல்வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

தூய்மை பணிகளுக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து அனுப்ப வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும்.

பக்தர்களுக்கு குடிநீர், உணவு போன்றவைகளை சுகாதாரத்தோடு வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.

பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள காஞ்சிபுரம் நகராட்சிக்கு அரசு சிறப்பு நிதி வழங்கும்.

பக்தர்கள் அதிக அளவில் காஞ்சிபுரம் நகரத்திற்கு வருவதையொட்டி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க, ஆகஸ்ட் 13,14,16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

YG மகேந்திரன் அவர்களின் தாயார் மறைவிற்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் இரங்கல்

YG மகேந்திரன் அவர்களின் தாயார் மறைவிற்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் இரங்கல்

திரைப்பட நடிகர் திரு.YG.மகேந்திரன் அவர்களின் தாயார் திருமதி.ராஜலக்ஷ்மி அவர்களின் மறைவிற்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான திரு.YG.மகேந்திரன் அவர்களின் தாயார் திருமதி.ராஜலக்ஷ்மி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.