புதுக்கோட்டை அமமுக நிர்வாகிகள் 200 பேர் கழகத்தில் இணைந்தனர்

புதுக்கோட்டை அமமுக நிர்வாகிகள் 200 பேர் கழகத்தில் இணைந்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமமுக, திமுக, மதிமுக கட்சிகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் உட்பட 200 பேர் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் அமமுக நிர்வாகிகள் 350 பேர் கழகத்தில் இணைந்தனர்

திண்டுக்கல் அமமுக நிர்வாகிகள் 350 பேர் கழகத்தில் இணைந்தனர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமமுக அமைப்பு செயலாளர் திரு.P.குமாரசாமி அவர்கள் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் உட்பட 350 பேர் நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்தனர்.

தமிழகம் திரும்பிய மாண்புமிகு துணை முதல்வர் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தமிழகம் திரும்பிய மாண்புமிகு துணை முதல்வர் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டின் வீட்டுவசதி, நகர்ப்புறம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மேம்படுத்தவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் தாயகம் திரும்பியயதையொட்டி தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் “தமிழகத்தின் தொழில் வளத்தை பெருக்கவும், வளர்ச்சி திட்டப் பணிகளை மேம்படுத்தவும் மேற்கொண்ட அமெரிக்க அரசுமுறை பயணத்தில், பேரன்பும் பேராதரவும் அளித்து பயணம் சிறக்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும், வாழ்த்தி உற்சாக வரவேற்பளித்த அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை” தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அமமுக அமைப்புச் செயலாளரும் மண்டலப் பொறுப்பாளருமான திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் கழகத்தில் இணைந்தார்

அமமுக அமைப்புச் செயலாளரும் மண்டலப் பொறுப்பாளருமான திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் கழகத்தில் இணைந்தார்

அமமுக-வின் அமைப்புச் செயலாளரும் மண்டலப் பொறுப்பாளருமான திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

மாற்றுக் கட்சியினர் 300 பேர் மாண்புமிகு முதல்வர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

மாற்றுக் கட்சியினர் 300 பேர் மாண்புமிகு முதல்வர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

திமுக, காங்கிரஸ் மற்றும் அமமுக கட்சிகளிலிருந்து விலகிய திருச்சி புறநகர் மாவட்டம் – அன்பில் மற்றும் லால்குடி பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 300 பேர் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து கழகத்தில் இணைந்தனர்.

உலக வங்கி தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு துணை முதல்வர் ஆலோசனை

உலக வங்கி தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு துணை முதல்வர் ஆலோசனை

வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் “தமிழகத்தின் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதியுதவி” பெறுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

“நெகிழி மாசில்லா தமிழ்நாடு” – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்

“நெகிழி மாசில்லா தமிழ்நாடு” – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கிரீன் லைஃப் தொண்டு நிறுவனம் இணைந்து, உலக சாதனை நிகழ்வாக 10 லட்சம் பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்கும் “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” நிகழ்ச்சியை உறுதிமொழி ஏற்று துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் 18 பேர் மாண்புமிகு முதல்வர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

ராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் 18 பேர் மாண்புமிகு முதல்வர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

அமமுக கட்சியிலிருந்து விலகிய ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் 18 பேர் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்தனர்.

மதுரை அமமுக நிர்வாகிகள் 25 பேர் மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

மதுரை அமமுக நிர்வாகிகள் 25 பேர் மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

மதுரை புறநகர் மாவட்டம் – அமமுக கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகள் 25 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

அமமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

அமமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை வீரவன்னியர் பேரவையின் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், மாவட்ட பொருளாளர், அரக்கோணம் நகர செயலாளர், காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் மற்றும் அமமுக கட்சியைச் சேர்ந்த வாலாஜா நகரப் பொருளாளர், நகர இணை செயலாளர், காங்கிரஸ் கட்சியின் காவேரிப்பாக்கம் ஒன்றியச் செயலாளர் ஆகியோர் நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.