மாண்புமிகு அம்மா வழியில் கழகப் பணியாற்றிட கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில்உறுதிமொழி ஏற்பு!

மாண்புமிகு அம்மா வழியில் கழகப் பணியாற்றிட கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில்உறுதிமொழி ஏற்பு!

இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நாம், மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில், கழக பணிகளை நிறைவேற்றிடவும், கழகத்தை வெற்றி பாதையில் வழிநடத்தவும் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உளப்பூர்வமாய் உறுதிமொழி ஏற்றனர்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா – மூன்றாமாண்டு நினைவஞ்சலி

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா – மூன்றாமாண்டு நினைவஞ்சலி

அகிலத்தின் அகல் விளக்காய் தியாகத்தின் திருவிளக்காய் “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற தத்துவத்தை வாழ்க்கையாய் கொண்டு இறுதிவரை மக்களுக்காகவே வாழ்ந்து அனைவரின் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரியவராய்த் திகழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நினைவஞ்சலி கழகம் சார்பில் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்தினர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா நினைவு நாள் – மாண்புமிகு துணை முதல்வர் அஞ்சலி

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு துணை முதல்வருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தந்து இல்லத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.

மாண்புமிகு அம்மா நினைவு தினம் – மாண்புமிகு முதல்வர் அஞ்சலி

மாண்புமிகு அம்மா நினைவு தினம் – மாண்புமிகு முதல்வர் அஞ்சலி

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

மாற்றுக் கட்சியினர் 200 பேர் கழகத்தில் இணைந்தனர்

மாற்றுக் கட்சியினர் 200 பேர் கழகத்தில் இணைந்தனர்

திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 200 பேர் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

அஇஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

அஇஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மாளிகையில் அஇஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 23 கழக ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், திட்டங்களை பாராட்டியும் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வலியுறுத்தியும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு கூட்டத்துக்கு பின்னர் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்

மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.நட்ராஜ் அவர்கள் அண்மையில் திருமணமான தனது மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் – தலைமைக் கழக அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் – தலைமைக் கழக அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சித்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்து கட்டணம் செலுத்திய கழக உடன்பிறப்புகள் 25.11.2019 முதல் 29.11.2019 வரை விருப்பமனு அசல் ரசீதுடன் நேரில் வந்து தொகையினைப் பெற்றுக் கொள்ளலாம்.

அமமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் கழகத்தில் இணைந்தார்

அமமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் கழகத்தில் இணைந்தார்

அமமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும் மண்டலப் பொறுப்பாளருமான திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு துணை முதல்வருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.