தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – கழகம் சார்பில் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – கழகம் சார்பில் மரியாதை

சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழகம் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அறிஞர் அண்ணா பிறந்த நாள் – கழகம் சார்பில் மரியாதை

அறிஞர் அண்ணா பிறந்த நாள் – கழகம் சார்பில் மரியாதை

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 111 வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலத்தில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழகம் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி கழகம் சார்பில் “தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு 17.9.2019 அன்று மரியாதை” செலுத்தும் நிகழ்ச்சியில் கழக உடன் பிறப்புகள் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கழக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.

கிருஷ்ண ஜெயந்தி – அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து !

கிருஷ்ண ஜெயந்தி – அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து !

காக்கும் கடவுளாம் பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாளை “ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி” ஆக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்களது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அஇஅதிமுக சார்பில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

5000- த்திற்கும் மேற்பட்ட அமமுகவினர் தாய்க்கழகம் திரும்பினர்

5000- த்திற்கும் மேற்பட்ட அமமுகவினர் தாய்க்கழகம் திரும்பினர்

கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு துணை முதல்வருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அமமுக கட்சியினைச் சேர்ந்த 5500 பேர் அக்கட்சியிலிருந்து விலகி தாய்கழகத்தில் இணைந்தனர்.

400 க்கும் மேற்ப்பட்ட அமமுகவினர் கழகத்தில் இணைந்தனர்

400 க்கும் மேற்ப்பட்ட அமமுகவினர் கழகத்தில் இணைந்தனர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அமமுகவிலிருந்து விலகிய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 400 பேர் நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

500 க்கும் மேற்பட்ட அமமுகவினர் கழகத்தில் இணைந்தனர்

500 க்கும் மேற்பட்ட அமமுகவினர் கழகத்தில் இணைந்தனர்

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு துணை முதல்வருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து தாய்க்கழகமான அஇஅதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

250-க்கும் மேற்ப்பட்ட திமுகவினர் கழகத்தில் இணைந்தனர்

250-க்கும் மேற்ப்பட்ட திமுகவினர் கழகத்தில் இணைந்தனர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று, சேலம் மாவட்டம் அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட திமுக-வினர் நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.