சிலம்பம் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வாழ்த்து !

சிலம்பம் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வாழ்த்து !

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று அகில இந்திய அளவில் ஈரோட்டில் நடைபெற்ற 11வது தேசிய சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற “சென்னை – இந்தியன்” சிலம்ப பள்ளி மாணவ மாணவியர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தால் நிறைவேற்றப்படும் “அனைவருக்கும் வீடு திட்டம், மறுகட்டுமான திட்டம்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சேலத்தில் ரூ.5.87 கோடி மதிப்பில் 17 புதிய திட்டப்பணிகள் துவக்கம்

சேலத்தில் ரூ.5.87 கோடி மதிப்பில் 17 புதிய திட்டப்பணிகள் துவக்கம்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் இன்று (8.06.2019) சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.5.87 கோடி மதிப்பிலான 17 முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்து விழா பேருரை ஆற்றினார்.

சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைத்தார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்

சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைத்தார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் இன்று (08.6.2019) சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற அரசு விழாவில் ஆவணி பேரூர் கீழ்முகம் ஊராட்சியில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

காயிதே மில்லத் அவர்கள் நினைவிடத்தில் மாண்புமிகு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை

காயிதே மில்லத் அவர்கள் நினைவிடத்தில் மாண்புமிகு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்லாமிய சாஹிப் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (05.06.2019) சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வாலாஜா மசூதியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவிப்பு

பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிகந்த துயரநிகழ்வுகளில் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.