சாகித்ய அகாதமி விருது பெறும் திருமதி.K.V.ஜெயஶ்ரீ -க்கு மாண்புமிகு முதல்வர் வாழ்த்து

சாகித்ய அகாதமி விருது பெறும் திருமதி.K.V.ஜெயஶ்ரீ -க்கு மாண்புமிகு முதல்வர் வாழ்த்து

“நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக சாகித்ய அகாதமி விருது பெறும் திருமதி.K.V.ஜெயஶ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுதல்களையும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அரசு தலைமை பொது மருத்துவமனை ஆய்வு

எடப்பாடி அரசு தலைமை பொது மருத்துவமனை ஆய்வு

மாண்புமிகு முதல்வர் அவர்கள் சேலம்-எடப்பாடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்து, சுகப்பிரசவமான திருமதி.வித்யா என்பவருக்கு அம்மா குழந்தை நல பெட்டகத்துடன் குழந்தைக்கான பிறப்பு சான்றிதழையும் வழங்கினார்.

மாண்புமிகு முதல்வரிடம் கோரிக்கை மனு

மாண்புமிகு முதல்வரிடம் கோரிக்கை மனு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (25.02.2020) சேலம் மற்றும் எடப்பாடி பயணியர் மாளிகையில், பொதுமக்களிடம் கனிவோடு குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஹஜ் புனிதப்பயணம் – மாண்புமிகு பிரதமருக்கு கடிதம்

ஹஜ் புனிதப்பயணம் – மாண்புமிகு பிரதமருக்கு கடிதம்

ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு பிரதமர்
@PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திடக்கழிவு மேலாண்மை 64 இலகுரக வாகனங்கள் துவக்கம்

திடக்கழிவு மேலாண்மை 64 இலகுரக வாகனங்கள் துவக்கம்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சேலம் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் சார்பில், திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முதல்நிலை சேகரப் பணிகளை மேற்கொள்வதற்காக 64 இலகுரக வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

“முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று” – புகைப்பட கண்காட்சி திறப்பு!

“முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று” – புகைப்பட கண்காட்சி திறப்பு!

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் “முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று” தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை, தண்டையார்பேட்டையில் நடைபெற்ற விழாவில், ஏழை எளிய மக்கள் சுமார் 18,000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு முதல்வரிடம் கோரிக்கை மனு

மாண்புமிகு முதல்வரிடம் கோரிக்கை மனு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடு – அமெரிக்க நாட்டு மாநில கவர்னர் பாராட்டு!!

தமிழகத்திற்கு தொழில் முதலீடு – அமெரிக்க நாட்டு மாநில கவர்னர் பாராட்டு!!

அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது தமிழகம் -அமெரிக்கா இடையே அரசுமுறை உறவை ஊக்குவித்தமைக்காகவும், தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு #America நாட்டின்
@StateMaryland மாநில கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.