மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியீடு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியீடு

இன்று @Dr_NamadhuAmma நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா சிறப்பு மலரை” கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா திருவுருவப் படத்திற்கு மரியாதை

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா திருவுருவப் படத்திற்கு மரியாதை

மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் – திருவுருவச்சிலை மரியாதை

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் – திருவுருவச்சிலை மரியாதை

சென்னை தலைமை கழக அலுவலகத்தில் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி இன்று மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மரியாதை செலுத்தினர்.

“முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று” – சாதனை விளக்கப்படம்

“முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று” – சாதனை விளக்கப்படம்

“முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று”

மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (23.2.2020) தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கப்பட கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

ரூ.33 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ரூ.33 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

இன்று (22.2.2020) திருச்செந்தூரில் நடைபெற்ற, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்டத்திற்கான பல்வேறு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 7000 பயனாளிகளுக்கு ரூ.33 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் ஆகியோர் வழங்கினர்.

பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா

பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று திருச்செந்தூர் – வீரபாண்டியபட்டணத்தில் “பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்” அவர்களின் மணிமண்டபம் மற்றும் அவரது திருவுருவச் சிலையினை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

ரூ.217 கோடியில் பாலிமர் தொழில் பூங்கா திட்டம்!

ரூ.217 கோடியில் பாலிமர் தொழில் பூங்கா திட்டம்!

தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தூதுக்குழு – தொலைத் தொடர் நிகழ்ச்சியில், மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்கா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, “Doing Business in Tamil Nadu – Investors Guide” புத்தகம் வெளியிடப்பட்டு, மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்னிலையில் ஜப்பான் டெவலப்பர்கள் பூங்கா” ஒப்பந்தம் மற்றும் சென்னை – பெங்களூர் தொழில்துறை நடைபாதை -பொன்னேரி தொடர்பான மாநில அளவிலான ஆதரவுபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

SSN பொறியியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா!

SSN பொறியியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா!

இன்று (21.2.2020) செங்கல்பட்டு – காலவாக்கத்தில் நடைபெற்ற #SSN பொறியியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி விழாப்பேருரை ஆற்றினார்.

CREDAI -யின் வீட்டு வசதி கண்காட்சி துவக்க விழா

CREDAI -யின் வீட்டு வசதி கண்காட்சி துவக்க விழா

இன்று (21.2.2020) சென்னை நந்தம்பாக்கத்தில #CREDAI அமைப்பின் வீட்டு வசதி #CREDAIFairPro2020 3 நாள் கண்காட்சியை மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைகழக பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைகழக பட்டமளிப்பு விழா

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைகழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மதிப்புறு முனைவர் பட்டங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாண்புமிகு துணை முதல்வர் ஆகியோர் வழங்கினர்.