அரசு பதிவுத்துறையில் STAR 2.0 மென்பொருள் விரிவாக்க திட்டம் துவக்கம்

அரசு பதிவுத்துறையில் STAR 2.0 மென்பொருள் விரிவாக்க திட்டம் துவக்கம்

மாண்புமிகு முதல்வர் அவர்கள் வணிகவரி & பதிவுத் துறை சார்பில் திருக்கோவிலூர், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, பதிவுத்துறையில் STAR 2.0 மென்பொருள் விரிவாக்க திட்டம் & 9 வணிகவரித்துறை அலுவலகங்களில் CCTV கேமராக்களின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்.

புதிய அருங்காட்சியகங்கள் திறப்பு

புதிய அருங்காட்சியகங்கள் திறப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரியலூர்-வாரணவாசியில் கட்டப்பட்டுள்ள புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம், புதிதாக கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகம்,கலை பண்பாட்டுத் துறை கட்டிடங்களை திறந்து வைத்து, புதுக்கோட்டையில் கட்டப்படவுள்ள இசைப்பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் இன்று இரண்டாம் நாளாக தலைமை செயலகத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் – கூரம்பாக்கம் ஏரிகளில் குடிமராமத்து பணிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் – கூரம்பாக்கம் ஏரிகளில் குடிமராமத்து பணிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் தொடக்க விழாவில் திருவள்ளூர், கூரம்பாக்கம் கிராம ஏரிகளில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.

திருவள்ளூர்- பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர்- பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, குடிமராமத்து பணிகள் 2019-20ன் கீழ், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் தொடக்க விழாவில், திருவள்ளூர், 43 பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக “அத்திகிரி” நூல் வெளியீடு

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக “அத்திகிரி” நூல் வெளியீடு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 2019-ன் சிறப்பு நிகழ்வாக திருக்கோயிலின் வரலாறு, அத்திவரதரின் சிறப்புகளை உள்ளடக்கி தமிழ், தெலுங்கு,ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்ட “அத்திகிரி” நூல் இன்று வெளியிடப்பட்டது.

ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 2019 – பாதுகாப்பு வசதிகள் குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 2019 – பாதுகாப்பு வசதிகள் குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவதையொட்டி அங்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அத்திவரதர் வைபவம் -2019 ஐ முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாவது ;

காஞ்சிபுரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்துவும், அப்பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுத்து செல்லவும் வசதிகள் ஏற்படுத்தித்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்களும், மாற்றுத் திறனாளிகளும் அமர்ந்து செல்ல கூடுதல்வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

தூய்மை பணிகளுக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து அனுப்ப வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும்.

பக்தர்களுக்கு குடிநீர், உணவு போன்றவைகளை சுகாதாரத்தோடு வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.

பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள காஞ்சிபுரம் நகராட்சிக்கு அரசு சிறப்பு நிதி வழங்கும்.

பக்தர்கள் அதிக அளவில் காஞ்சிபுரம் நகரத்திற்கு வருவதையொட்டி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க, ஆகஸ்ட் 13,14,16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் மறைவு – மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் மறைவு – மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கட்சி பேதமின்றி அனைவரிடத்தும் அன்பாகப் பழகும் பண்பாளர் திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் என்றும் இந்தியர்களின் பேரன்பை பெற்றவர; பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த தலைவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியா பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டு மக்களின்பால் பேரன்பு கொண்டவர் என்றும் இந்தியாவில், மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி என்று அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழால் புகழாராம் சூட்டப்பட்ட பெருமைக்குரியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கைத்தறி தினம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வாழ்த்து

தேசிய கைத்தறி தினம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வாழ்த்து

தேசிய கைத்தறி தினத்தையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

கைத்தறித் தொழில் விவசாயத்துக்கு அடுத்து மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் தொழிலாக விளங்குகிறது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் மக்கள் கைத்தறி பட்டு மற்றும் பருத்தி ரகங்களை வாங்கி பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவு

குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவு

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.