சேலம் அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

சேலம் அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை ஜலகண்டாபுரம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

திருப்பரங்குன்றம் அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

திருப்பரங்குன்றம் அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 19 பேர் நேரில் சந்தித்து கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.

விருதுநகரில் 12 ஏக்கரில் காமராஜர் மணிமண்டபம்

விருதுநகரில் 12 ஏக்கரில் காமராஜர் மணிமண்டபம்

பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மதுரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தை மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கர்மவீரர் காமராஜரை சிறப்பிக்கும் வகையிலும், அவரது சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும். பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் விருதுநகர் நுழைவாயிலில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தில், காமராஜர் மாணவ மணிகளை தன் இருபக்கமும் பாசத்தோடு அணைத்துக் கொண்டிருக்கும் முழுஉருவ வெண்கலச் சிலை, சிற்ப முற்றம் 50 அடி உயரம் கொண்ட அணையா தீபம், செயற்கை நீருற்று போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் காமராஜர் மணிமண்டப வளாகத்தில், மலர் தோட்டம், உணவகம், பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரிவடிவம், மாநாட்டுக்கூடம், தியான மண்டபம் ஆகிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.

“நீதியின் முன் அனைவரும் சமம்” கொள்கையை கடைபிடிக்கும் மாநிலம் தமிழகம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் பெருமிதம்

“நீதியின் முன் அனைவரும் சமம்” கொள்கையை கடைபிடிக்கும் மாநிலம் தமிழகம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் பெருமிதம்

சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு ஜனாதிபதி திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் மாண்புமிகு கவர்னர் திரு.பன்வாரிலால் புரோகித், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி. சண்முகம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பேசியதாவது;
இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அம்பேத்கார் பல்கலைக்கழகம் சரியான 3 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவிக்கும் வகையில் டாக்டர் பட்டத்தை ஜனாதிபதியின் கைகளால் வழங்கி உள்ளது. இதுபோல் நீதித்துறை மற்றும் சட்டத்துறை வரலாற்றில் கவுரவிக்கப்பட்டது முதல்முறையாகும். இந்த டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிக்கு முன் அனைவரும் சமம்

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் மாநிலம் தமிழ்நாடாகும். நீதி கேட்ட பசுவிற்காக, அதன் கன்றை கொன்ற தனது மகனை தேர் காலில் இட்டு கொன்ற மனுநீதி சோழன், நீதி தவறியதற்காக தனது உயிரை விட்ட பாண்டிய மன்னன், புறாவிற்காக தனது தொடையிலிருந்து சதையை அறுத்துக் கொடுத்த சிபி சக்கரவர்த்தி போன்ற நீதிக்கு தலை வணங்கும் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் துவங்கப்படவுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் ரூ.998.33 கோடியில் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள சட்ட பல்கலைக் கழகங்களில் முதன்முறையாக மிகப்பெரிய அளவில் AIR இணையவழி சட்டத்தொகுப்பகம் மற்றும் சட்டச்செயலி பகிர்வகம் ஆகியவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அமமுக மகளிர் அணி இணை செயலாளர் கழகத்தில் இணைந்தார்

அமமுக மகளிர் அணி இணை செயலாளர் கழகத்தில் இணைந்தார்

அமமுக கட்சியை சேர்ந்த மகளிர் அணி இணை செயலாளர் திருமதி.கவிதா சசிகுமார் அவர்கள் மற்றும் அவரது கணவர் திரு.எம்.சசிக்குமார் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி, கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.

கழகத்தில் இணைந்தனர் குமரி மாவட்ட அமமுக நிர்வாகிகள்

கழகத்தில் இணைந்தனர் குமரி மாவட்ட அமமுக நிர்வாகிகள்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை கன்னியாகுமரி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அளவில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வந்த அமமுக நிர்வாகிகள் 75 பேர் நேரில் சந்தித்து கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.

தூத்துக்குடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தூத்துக்குடியில் முதியோர் உதவித்தொகை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம், முத்ராகடன் திட்டத்தின் கீழ் கடன் உதவித்தொகை ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மூதாட்டியின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை

மூதாட்டியின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 6.7.2019 அன்று தென்காசிக்கு வருகை தந்த போது, திருப்பதி என்ற மூதாட்டி வாழ்வாதாரத்திற்கு உதவிட கோரி மனு அளித்ததையொட்டி, இன்று தூத்துக்குடியில் அம்மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிக்கை

சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் தொழில்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை , தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, உலகெங்கும் உள்ள தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்தம் ஆலோசனைகள் பெறவும், முதலீடுகளை ஈர்க்கவும் ரூ.60 லட்சம் மதிப்பில் “யாதும் ஊரே” என்ற சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் உருவாக்கப்படும்.

புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் “புதிய பிரிவு” ஒன்று துவங்கப்படும். ஆண்டுதோறும் ரூ.10 கோடி மதிப்பில் “தொழில் வளர் தமிழகம்” என்ற பெயரில் கருத்தரங்குகள், பரப்புரைகள், தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் (அ) அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன், தொழில் முதலீடுசெய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ரூ.1 கோடியில் வலைதளம் உருவாக்கப்படும்.

“தொழில் தோழன்” (Biz Buddy) என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ரூ.50 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்படும். அதிகபட்சமாக 4 வாரங்களுக்குள் அப்புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய “தூத்துக்குடி -சிப்காட் நிறுவனம், முல்லைக்காடு பகுதியில் ரூ.634 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் – வடகால் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற்கூட கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

சிப்காட் வல்லம் – வடகால் மற்றும் இராணிப்பேட்டை தொழில் பூங்காக்களில் ரூ.50 கோடியில் குடியிருப்புகள் அமைக்கப்படும். சிப்காட் – சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.40 கோடியில் வணிக வசதிகள் மையம் கட்டப்படும்.

குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி திறனை மேம்படுத்த, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் 3% வட்டி மானியம் 6% ஆக உயர்த்தி வழங்கப்படும்.

கோயம்புத்தூரில் 9 ஏக்கர் நிலத்தில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம் ரூ.200 கோடி மதிப்பில் கட்டப்படும்.

காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் வான்வெளி & பாதுகாப்பு பூங்காவில், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம் ரூ.100 கோடியில் நிறுவப்படும்.

கயிறு தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2.33 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

காஞ்சிபுரம் – பெரும்பாக்கம், நாகப்பட்டினம் – செம்போடை பகுதிகளில் ரூ.26 கோடியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிபெறும் 10000 பேருக்கு ரூ.7.5 கோடியில் கருவித் தொகுப்புகள் வழங்கப்படும்.

அம்பத்தூர், செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், பெரம்பலூர், கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் “புதிய தொழிற்பிரிவுகள்” ரூ.44.19 கோடியில் தொடங்கப்படும்.

12 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் ரூ.64.41 கோடியில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் ரூ.40.80 கோடி மதிப்பில் “நம்பிக்கை இணைய கட்டமைப்பு (Blockchain Backbone Infrastructure) அமைக்கப்படும்.

பொதுமக்கள் அரசு துறைகளின் சேவைகளைப் பெற தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் “மக்கள் எண்” உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையான சட்டப்படியான ஆவணங்கள், சான்றிதழ்கள் குடிமக்கள் பெட்டகத்திலிருந்து விண்ணப்பிக்காமலேயே குறிப்பறிந்து தானாகவே வழங்கப்படும்.
“மக்களைத் தேடி அரசு” என்ற இந்த திட்டம் ரூ.90 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.