ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 2019 – பாதுகாப்பு வசதிகள் குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 2019 – பாதுகாப்பு வசதிகள் குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவதையொட்டி அங்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அத்திவரதர் வைபவம் -2019 ஐ முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாவது ;

காஞ்சிபுரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்துவும், அப்பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுத்து செல்லவும் வசதிகள் ஏற்படுத்தித்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்களும், மாற்றுத் திறனாளிகளும் அமர்ந்து செல்ல கூடுதல்வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

தூய்மை பணிகளுக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து அனுப்ப வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும்.

பக்தர்களுக்கு குடிநீர், உணவு போன்றவைகளை சுகாதாரத்தோடு வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.

பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள காஞ்சிபுரம் நகராட்சிக்கு அரசு சிறப்பு நிதி வழங்கும்.

பக்தர்கள் அதிக அளவில் காஞ்சிபுரம் நகரத்திற்கு வருவதையொட்டி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க, ஆகஸ்ட் 13,14,16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *