விருதுநகரில் 12 ஏக்கரில் காமராஜர் மணிமண்டபம்

விருதுநகரில் 12 ஏக்கரில் காமராஜர் மணிமண்டபம்

பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மதுரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தை மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கர்மவீரர் காமராஜரை சிறப்பிக்கும் வகையிலும், அவரது சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும். பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் விருதுநகர் நுழைவாயிலில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தில், காமராஜர் மாணவ மணிகளை தன் இருபக்கமும் பாசத்தோடு அணைத்துக் கொண்டிருக்கும் முழுஉருவ வெண்கலச் சிலை, சிற்ப முற்றம் 50 அடி உயரம் கொண்ட அணையா தீபம், செயற்கை நீருற்று போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் காமராஜர் மணிமண்டப வளாகத்தில், மலர் தோட்டம், உணவகம், பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரிவடிவம், மாநாட்டுக்கூடம், தியான மண்டபம் ஆகிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *