திருவள்ளுவர் திருநாள்,  தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா!!!!

திருவள்ளுவர் திருநாள், தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா!!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (20.01.2020) நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் விழாப் பேருரையாற்றி, 2020-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, 2019-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்தென்றல் திரு.வி.க,முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகளாக 2019-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது,கபிலர், உ.வே.சா, கம்பர், சொல்லின் செல்வர், உமறுப்புலவர், ஜி.யு.போப், இளங்கோவடிகள், அம்மா இலக்கிய விருது, சிந்தனை சிற்பி சிங்கார வேலர், மறைமலை அடிகளார், அயோத்திதாச பண்டிதர், 2018-க்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது, மதுரை உலகத்தமிழ் சங்க விருதுகளாக 2019-ம் ஆண்டிற்கான இலக்கிய, இலக்கண, மொழியியல் விருது, மற்றும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் போன்ற விருதுகளை 52 தமிழறிஞர்களுக்கு வழங்கி, விருது பெற்ற அனைத்து தமிழறிஞர்களுக்கும் விருதுடன் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை, தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கியும் கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *