தமிழக காவல்துறைக்கு ஸ்கோச் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள்!

தமிழக காவல்துறைக்கு ஸ்கோச் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் இன்று, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் சந்தித்து தமிழகத்திற்கு வழங்கப்பட்ட “ஸ்கோச் தங்கம் மற்றும் வெள்ளி காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

புதுடெல்லியில் ஸ்கோச் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் “ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக “ஸ்கோச் தங்க” விருது, தூய்மையான காவல் நிலையப் பராமரிப்புப் பணிகளுக்காக “ஸ்கோச் வெள்ளி” விருது, காணாமல் போனவர்கள் (ம) அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை ஒப்பீடுசெய்து அடையாளம் கண்டறியும் செயலியை உருவாக்கியமைக்கு “ஸ்கோச் வெள்ளி” மற்றும் நெல்லை மாநகர காவல்துறை மூலமாக “மக்களை நோக்கி மாநகர காவல்” என்ற புதிய திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு “ஸ்கோச் வெள்ளி” ஆகிய விருதுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் இன்று, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் சந்தித்து தமிழகத்திற்கு வழங்கப்பட்ட “ஸ்கோச் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *