எந்த காலத்திலும் அதிமுக ஆட்சியினை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

எந்த காலத்திலும் அதிமுக ஆட்சியினை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பாறையூரில் கழக வேட்பாளர் திரு.வி.வி.செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தில் “மாண்புமிகு அம்மா அவர்கள் விட்டு சென்ற பணியினை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் வேளையில், மே-23 க்குப் பிறகு அதிமுக ஆட்சியை அழித்து விடலாம் என சிலர் கனவுக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் எந்த காலத்திலும் அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் முழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *