தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அமைப்பினர் மாண்புமிகு முதல்வர் அவர்களுடன் சந்திப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அமைப்பினர் மாண்புமிகு முதல்வர் அவர்களுடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (09.12.2019) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்று, கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.162.64 கோடி மதிப்பிலான குடியிருப்புகள்  கட்டடங்கள் திறப்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.162.64 கோடி மதிப்பிலான குடியிருப்புகள் கட்டடங்கள் திறப்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சென்னை மகாகவி பாரதிநகர் திட்ட பகுதியில் ரூ.129.50 கோடியில் 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகள் சென்னை, மதுரையில் ரூ.33.14 கோடியில் குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபம் என ரூ.162.64 கோடியிலான கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் கழகத்தில் இணைந்தனர்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் கழகத்தில் இணைந்தனர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சேலம் – நங்கவள்ளி ஒன்றியம், சாணாரப்பட்டி ஊராட்சி, மசக்காளியூர் பகுதியை சேர்ந்த திமுக உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

கொடிநாள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் நன்கொடை

கொடிநாள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் நன்கொடை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (07.12.2019) முகாம் அலுவலகத்தில் கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.இரா.சீதாலட்சுமி அவர்களிடம் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார்.

உள்ளாட்சித்தேர்தல் – கழக ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித்தேர்தல் – கழக ஆலோசனைக் கூட்டம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு தலைமைக் கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆகியோருடன், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முனைப்புடன் ஆற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (06.12.2019) சேலம் நெடுஞ்சாலை நகர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பிற கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைபினர் கழகத்தில் இணைந்தனர்

பிற கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைபினர் கழகத்தில் இணைந்தனர்

அமமுக மற்றும் பிற கட்சிகளிலிருந்து விலகிய தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் (ம) வழக்கறிஞர்கள் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

மாண்புமிகு அம்மா அவர்கள் நினைவிடத்திற்கு அமைதிப் பேரணியாய் சென்று அஞ்சலி

மாண்புமிகு அம்மா அவர்கள் நினைவிடத்திற்கு அமைதிப் பேரணியாய் சென்று அஞ்சலி

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கழக ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை அண்ணா சாலையிலிருந்து மாண்புமிகு அம்மா அவர்கள் நினைவிடத்திற்கு அமைதி பேரணியாக சென்று நினைவஞ்சலி செலுத்தினர்.

மாண்புமிகு அம்மா வழியில் கழகப் பணியாற்றிட கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில்உறுதிமொழி ஏற்பு!

மாண்புமிகு அம்மா வழியில் கழகப் பணியாற்றிட கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில்உறுதிமொழி ஏற்பு!

இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நாம், மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில், கழக பணிகளை நிறைவேற்றிடவும், கழகத்தை வெற்றி பாதையில் வழிநடத்தவும் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உளப்பூர்வமாய் உறுதிமொழி ஏற்றனர்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா – மூன்றாமாண்டு நினைவஞ்சலி

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா – மூன்றாமாண்டு நினைவஞ்சலி

அகிலத்தின் அகல் விளக்காய் தியாகத்தின் திருவிளக்காய் “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற தத்துவத்தை வாழ்க்கையாய் கொண்டு இறுதிவரை மக்களுக்காகவே வாழ்ந்து அனைவரின் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரியவராய்த் திகழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நினைவஞ்சலி கழகம் சார்பில் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்தினர்.